< Back
கிரிக்கெட்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் வீரருக்கு ரூ. 1 கோடி நிவாரணத்தொகை... பி.சி.சி.ஐ. அறிவிப்பு
கிரிக்கெட்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் வீரருக்கு ரூ. 1 கோடி நிவாரணத்தொகை... பி.சி.சி.ஐ. அறிவிப்பு

தினத்தந்தி
|
14 July 2024 3:23 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அன்சுமான் கெய்க்வாட் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அன்சுமான் கெய்க்வாட் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தியாவுக்காக அவர் 12 வருடங்களில் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பெருமையை கொண்டவர். மேலும் இறுதியில் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் அவர் செயல்பட்டார். அத்துடன் ஓய்வுக்கு பின் பிசிசிஐ நிர்வாகத்தில் அவர் முக்கிய பொறுப்பிலும் இருந்தார்.

தற்போது 71 வயதாகும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வருகிறார். எனவே தமக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்யுமாறு அவருடைய சார்பில் பி.சி.சி.ஐ.க்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவரது கோரிக்கையை ஏற்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா ரூ. 1 கோடி நிவாரணத்தொகை அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்