அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சி; தாண்டியா நடனமாடிய தோனி - பிராவோ
|இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் பிரபலங்கள், இந்திய நடிகர் - நடிகைகள், உலக அளவில் மிகவும் பிரபலமான நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
குஜராத் ,
முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் வரும் ஜூலை 12-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து திருமணத்திற்கு முன்பாக ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் கடந்த 1-ம் தேதி முதல் 3 தேதி முதல் நடைபெற்று வருகிறது.
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன் காம்ப்ளக்ஸில் இந்த நிகழ்வானது மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் பிரபலங்கள், இந்திய நடிகர் - நடிகைகள், இந்தியாவின் முன்னணி வி.ஐ.பி.க்கள் மட்டுமின்றி, உலக அளவில் மிகவும் பிரபலமான நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சச்சின் டெண்டுல்கர், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ப்ராவோ, பொல்லார்ட், சாம் கரன், பவுல்ட் உள்ளிட்ட ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் அமீர் கான் , ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் ஆகிய மூவரும் இணைந்து நடனமாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அதேபோல் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹாலிவுட் பாப் பாடகரான ரிஹானாவுடன் நடனமாடும் வீடியோ ஒன்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியானது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தோனி மற்றும் பிராவோ இருவரும் இணைந்து தாண்டியா நடனம் ஆடியுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.