< Back
கிரிக்கெட்
ரபேயா கான் அசத்தல் பந்துவீச்சு...தாய்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற வங்காளதேசம்

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

ரபேயா கான் அசத்தல் பந்துவீச்சு...தாய்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற வங்காளதேசம்

தினத்தந்தி
|
23 July 2024 7:49 AM IST

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தாய்லாந்தை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி பெற்றது.

தம்புல்லா,

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு தம்புல்லாவில் நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் - தாய்லாந்து அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய தாய்லாந்து வீராங்கனைகள் வங்காளதேசத்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்த தாய்லாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தாய்லாந்து தரப்பில் பூச்சாதம் 40 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரபேயா கான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 97 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்காளதேசம் 17.3 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 100 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வங்காளதேசம் தரப்பில் முர்ஷிதா காதுன் 50 ரன்கள் எடுத்தார். தாய்லாந்து தரப்பில் திபட்சா புத்தாவோங், பன்னிட மாயா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

மேலும் செய்திகள்