< Back
கிரிக்கெட்
இளம் வீரர்கள் அனைவரும் அவரை பின்பற்ற வேண்டும்- கோலிக்கு ரோகித் சர்மா புகழாரம்

image courtesy; AFP

கிரிக்கெட்

இளம் வீரர்கள் அனைவரும் அவரை பின்பற்ற வேண்டும்- கோலிக்கு ரோகித் சர்மா புகழாரம்

தினத்தந்தி
|
28 Jan 2024 10:25 AM GMT

இந்திய வீரர்கள் காயமடைந்தால் சிகிச்சைக்கு செல்லக்கூடிய பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு (என்சிஏ) விராட் கோலி எப்போதுமே காயத்தால் சென்றதில்லை என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து வருகிறார். மேலும் நவீன கிரிக்கெட்டில் பிட்னஸ் எனும் வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் அளவுக்கு கடுமையான பயிற்சிகளை செய்து தம்முடைய உடலை கச்சிதமாக வைத்திருக்கும் விராட் கோலி அதை பயன்படுத்தி பீல்டிங் துறையில் அபாரமாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்திய வீரர்கள் காயமடைந்தால் சிகிச்சைக்கு செல்லக்கூடிய பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு (என்சிஏ) விராட் கோலி எப்போதுமே காயத்தால் சென்றதில்லை என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். அந்தளவுக்கு பிட்னசுக்கு எடுத்துக்காட்டாக திகழும் விராட் கோலியை இளம் வீரர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ள அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;

"தன்னுடைய மொத்த கெரியரிலும் விராட் கோலி எப்போதுமே என்சிஏவில் இருந்ததில்லை. எனவே அவரிடம் இருக்கும் ஆர்வத்தை அனைத்து இளம் வீரர்களும் பார்க்க வேண்டும் என்று நான் சொல்வேன். அவருடைய கவர் ட்ரைவ், பிளிக் போன்ற பேட்டிங் டெக்னிக்கை விடுங்கள். முதலில் வீரர்கள் தாங்கள் இன்று இருக்கும் இடத்தின் தரம் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நான் போதுமான அளவுக்கு விராட் கோலியை பார்த்துள்ளேன். அவர் இதுவரை சாதித்துள்ளவற்றில் எளிதாக திருப்தியடைந்து விடலாம். அதனால் 2 - 3 தொடர்கள் கழித்து விளையாட வருகிறேன் என்று அவரால் எளிதாக சொல்ல முடியும். ஆனால் அவர் அனைத்து தொடரிலும் அணிக்காக இருப்பார். அதுபோன்ற எண்ணத்தை ஒருவருக்கு யாரும் சொல்லித் தர முடியாது. நீங்கள் அதை மற்றவர்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் விராட் கோலியிடம் இருந்து நீங்கள் டெக்னிக்கல் அளவில் பார்ப்பதற்கு முன்பாக கற்றுக்கொள்ள வேண்டிய விஷயமாகும்' என்று கூறினார்.

மேலும் செய்திகள்