அகில இந்திய புச்சிபாபு கிரிக்கெட்: தமிழக அணிகளுக்கு விஜய் சங்கர், ஷாருக்கான் கேப்டன்...!
|அகில இந்திய புச்சிபாபு கிரிக்கெட் போட்டி வருகிற 15-ந் தேதி சென்னையில் தொடங்குகிறது.
சென்னை,
அகில இந்திய புச்சிபாபு கிரிக்கெட் போட்டி வருகிற 15-ந் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்தப்போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பிரசிடென்ட் லெவன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் அணிகளை தமிழ்நாடு சீனியர் தேர்வு குழு அறிவித்துள்ளது.
டி.என்.சி.ஏ. பிரசிடென்ட் லெவனுக்கு விஜய் சங்கரும், டி.என்.சி.ஏ. லெவனுக்கு ஷாருக்கானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பிரசிடென்ட் லெவன் அணி விவரம்:
விஜய் சங்கர் (கேப்டன்), சாய் கிஷோர் (துணை கேப்டன்), பி சச்சின், ஆர் விமல் குமார், ஜி அஜிதேஷ், எஸ் அஜித் ராம், எஸ் லக்செய் ஜெய்ன், சந்தீப் வாரியர், ஹெச் திரிலோக் நாக், எம் முகமது, டி ராகுல், வி பி திரன், எஸ் ரித்திக் ஈஸ்வரன், அத்தீக் உர் ரஹ்மான், எஸ் முகமது அலி, எஸ் கணேஷ் (விக்கெட் கீப்பர்)
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் அணி விவரம்:
ஷாருக்கான் (கேப்டன்), டி சந்தோஷ் குமார், ஜிதேந்திர குமார், நிதிஷ் எஸ் ராஜகோபால், கே டி ஏ மாதவா பிரசாத், எம் சித்தார்த், ஆர் ராம் அரவிந்த், அஜய் கே கிருஷ்ணன், சுபாங் மிஸ்ரா, எஸ் குரு ராகவேந்திரன், சச்சின் ரதி, ஜாதவேத் சுப்ரமணியம், பி சரவணகுமார், குர்ஜப்நீத் சிங், எல் விக்கேஷ், ஜி எஸ் சாமுவேல் ராஜ்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரரான ஆர்.அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் சுந்தர், இந்திய அணியின் அயர்லாந்து தொடருக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.