< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
மும்பைக்கு எதிரான ஆட்டம்: 15 பந்துகளில் அரைசதம் விளாசி ஜேக் பிரேசர் மெக்கர்க் அசத்தல்
|27 April 2024 3:52 PM IST
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் டெல்லி - மும்பை அணிகள் மோதி வருகின்றன.
புதுடெல்லி,
ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
அதன்படி முதலாவது ஆட்டத்தில் டெல்லி - மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய டெல்லி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேக் பிரேசர் மெக்கர்க் - அபிஷேக் போரல் ஆகியோர் களமிறங்கினர். இதில் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய ஜேக் பிரசர் வெறும் 15 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் அரைசதம் விளாசி அசத்தினார். தற்போதைய நிலவரப்படி டெல்லி 4.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் எடுத்துள்ளது. ஜேக் 22 பந்துகளில் 68 ரன்களுடன் களத்தில் உள்ளார்.