ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்துக்கு எதிரான தொடர்கள்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
|ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்துக்கு எதிரான தொடர்களுக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி முதலில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் செப்டம்பர் 18 முதல் 22 வரை நடைபெற உள்ளது.
இதனையடுத்து செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 7 வரை அயர்லாந்துக்கு எதிராக தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது.
இந்த 2 தொடர்களுமே ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற உள்ளன. இந்நிலையில் இந்த தொடர்களுக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தென் ஆப்பிரிக்கா ஒருநாள் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), ஒட்னெய்ல் பார்ட்மேன், நான்ட்ரே பர்கர், டோனி டி சோர்ஜி, ஜார்ன் போர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ராம், வியான் முல்டர், லுங்கி நிகிடி, அண்டில் பெஹ்லுக்வாயோ, நகாபா பீட்டர், ஆண்டில் சிம்லேன், ஜேசன் ஸ்மித், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரைன் மற்றும் லிசாட் வில்லியம்ஸ்.
அயர்லாந்துக்கு எதிரான தென்ஆப்பிரிக்கா டி20 அணி: ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஆட்னீல் பார்ட்மேன், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நான்ட்ரே பர்கர், ஜார்ன் போர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், பேட்ரிக் க்ரூகர், வியான் முல்டர், லுங்கி நிகிடி, நகாபா பீட்டர், ஜான் சிமிலா, ஜான் ரிக்கெல்டன், ஆண்டில் சிம்லேன், ஜேசன் ஸ்மித் ஸ்டப்ஸ் மற்றும் லிசாட் வில்லியம்ஸ்.
அயர்லாந்துக்கு எதிரான தென் ஆப்பிரிக்கா ஒருநாள் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), ஒட்னெய்ல் பார்ட்மேன், நான்ட்ரே பர்கர், டோனி டி ஜோர்ஜி, ஜார்ன் போர்டுயின், வியான் முல்டர், லுங்கி நிகிடி, அண்டில் பெஹ்லுக்வாயோ, நகாபா பீட்டர், ரியான் ரிக்கல்டன், ஜேசன் ஸ்மித், ஸ்டப்ஸ், வாண்டர் துசென், கைல் வெர்ரைன் மற்றும் லிசாட் வில்லியம்ஸ்.