< Back
கிரிக்கெட்
இலங்கை டெஸ்ட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

image courtesy; ICC

கிரிக்கெட்

இலங்கை டெஸ்ட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
29 Jan 2024 6:48 PM IST

ஹஷ்மத்துல்லா ஷாஹிடி தலைமையிலான அந்த அணியில் 4 அறிமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட் , 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஷ்மத்துல்லா ஷாஹிடி தலைமையிலான அந்த அணியில் 4 அறிமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் அணியில் சேர்க்கப்படவில்லை.

ஆப்கானிஸ்தான் அணி விவரம் பின்வருமாறு;-

ஹஷ்மத்துல்லா ஷாஹிடி (கேப்டன்), இப்ராஹிம் சத்ரன், அப்துல் மாலிக், நூர் அலி சத்ரன், ரஹ்மத் ஷா, பஹிர் ஷா, நசீர் ஜமால், இக்ரம் அலிகில், முகமது இஷாக், குவைஸ் அகமது, சியா - உர்-ரெஹ்மான், ஜகீர் கான், யாமின் அகமதுசாய், நிஜத் மசூத், முகமது சலீம் மற்றும் நவித் சத்ரன்.

மேலும் செய்திகள்