< Back
கிரிக்கெட்
2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான்...!

Image Courtesy: AFP 

கிரிக்கெட்

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான்...!

தினத்தந்தி
|
29 Nov 2022 9:02 AM IST

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.

துபாய்,

இந்தியாவில், அடுத்த ஆண்டு உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடருக்கு தகுதி பெற, முதன்முறையாக உலக கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. இதில் 8 இடங்களுக்கு, 13 அணிகள் விளையாடுகின்றன.

இதுவரை, போட்டியை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான் என 6 அணிகள் தகுதி பெற்றிருந்தன. இந்நிலையில் இலங்கை சென்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது. பல்லேகலேயில் நடந்த இரண்டாவது போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இதனையடுத்து தொடருக்கான புள்ளிப்பட்டியலில் 5 புள்ளி கூடுதலாக பெற்ற ஆப்கானிஸ்தான், 115 புள்ளிகளுடன் 7வது இடத்தை கைப்பற்றியது. இதன்மூலம் உலக கோப்பை (2023) பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றது.

தற்போது புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ள இலங்கை அணி (67 புள்ளி), ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் பட்சத்தில் 10 புள்ளிகள் பெறும். வெஸ்ட் இண்டீஸ் (88 புள்ளி), அயர்லாந்து (68) அணிகள் முறையே 8, 9வது இடத்தில் உள்ளன. தென் ஆப்பிரிக்க அணி 11வது இடத்தில் உள்ளது.


மேலும் செய்திகள்