< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
பிக்பாஷ் லீக் தொடரிலிருந்து ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் விலகல்!
|23 Nov 2023 10:40 AM IST
ரஷித் கான் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக 69 போட்டிகளில் விளையாடி 98 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
சிட்னி,
இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போன்று ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் தொடர் (பிபிஎல்) நடைபெற்று வருகிறது. இதன் 13-வது சீசன் அடுத்த மாதம் 7ஆம் தேதி தொடங்கி ஜனவரி 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பிபிஎல் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதால் வரும் பிபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவரது விலகல் அடிலெய்டு அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
ரஷித் கான் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக 69 போட்டிகளில் விளையாடி 98 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.