< Back
கிரிக்கெட்
ஆப்கானிஸ்தான் அணிக்கு 128 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம்
கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான் அணிக்கு 128 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம்

தினத்தந்தி
|
30 Aug 2022 9:31 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியும் வங்காளதேச அணியும் மோதுகின்றன.

துபாய்,

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டி தொடரில் சார்ஜாவில் இன்று இரவு நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் (பி பிரிவு) அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி ஆப்கானிஸ்தான் அணி பந்து வீசியது.

வங்காளதேச அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தது. இதனால், அந்த அணியின் ரன் வேகம் அதிகரிக்கவில்லை. ஆப்கானிஸ்தான் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.

மேலும் செய்திகள்