< Back
கிரிக்கெட்
ரிங்கு இஸ் கிங்...! ஒரு ஆபாச நடிகையின் பாராட்டு ; போட்டோ வேறு...!
கிரிக்கெட்

ரிங்கு இஸ் கிங்...! ஒரு ஆபாச நடிகையின் பாராட்டு ; போட்டோ வேறு...!

தினத்தந்தி
|
11 April 2023 4:45 PM IST

ரிங்கு சிங்குவின் பெயர் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட்டானது.

வாஷிங்டன்

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 13-வது லீக்கில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இதில் கொல்கத்தா அணியின் உத்தரப்பிரதேச வீரர் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 பந்துகளில் 5 சிக்சர்கள் விளாசி கொல்கத்தாவை தோல்வியின் பிடியிலிருந்து வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

கடைசி 8 பந்துகளில் 39 ரன்கள் தேவைப்பட்ட போதுதான் ரிங்கு சிங் எழுச்சி கண்டார். அதுவரை அவர் 14 பந்துகளில் 8 ரன்கள்தான் எடுத்திருந்தார்.

ஜோஷ் லிட்டில் வீசிய 19வது ஓவரின் 5வது பந்தையும் 6வது பந்தையும் சிக்ஸ், பவுண்டரி அடித்து கடைசி ஓவரில் 29 தேவை என்ற நிலைக்கு முன்னேற்றினார்.

20வது ஓவரைக் யாஷ் தயால் வீசினார் முதல் பந்தை உமேஷ் யாதவ் ஆடினார், அவருக்கு சிங்கிள் கொடுத்தார். அங்கு அவர் விக்கெட்டை எடுத்திருந்தால் ஆட்டம் மாறி இருக்கும் ஆகவே கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் தேவை, ரிங்கு சிங் பேட்டிங் பகுதிக்கு வந்தார்.

தொடர்ந்து 5 பந்துகளில் 5 சிக்ஸ் அடித்து அணியை வெற்றிபெறவைத்தார். ஒரே நாள் இரவில் ஹீரோவானார் ரிங்கு. 21 பந்துகளைச் சந்தித்த ரிங்கு சிங் 1 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 48 நாட் அவுட் என்று ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

கடைசி ஓவரில் 31 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோரை அடித்து வெற்றி பெற்ற முதல் அணியாக திகழ்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

இதை தொடர்ந்து ரிங்கு சிங்குவின் பெயர் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட்டானது. ரிங்கு சிங்குவின் இந்த ஆட்டத்தை அனைவரும் பாராட்டுகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தான் ரிங்கு சிங்குவின் அதிரடி ஆட்டத்தால் அமெரிக்காவின் ஆபாச நடிகை கேந்திரா லஸ்ட் கவரப்பட்டுள்ளார். இதனால் அவர் ரிங்கு சிங்குவிற்கு ஆதரவாகவும், அவரை பாராட்டியும் கேந்திரா லஸ்ட் தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். இந்து தற்போது டிரெண்ட்டாகி வருகிறது.

அதாவது கேந்திரா லஸ்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் ரிங்கு சிங்குவுடன் தான் இருப்பது போன்ற போட்டோவை எடிட் செய்து பதிவிட்டுள்ளார். மேலும் ''Ringu is King'' என அவர் பாராட்டி உள்ளார். இதனை பார்த்த பலரும் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்னும் சிலர் வேடிக்கையான கமெண்ட்டுகளை பதிவிட்டு வந்தாலும், அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் ரிங்கு சிங் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்தார். அப்போது ரிங்கு சிங்கும் தனது தந்தைக்கு உதவியாக இருந்தார். இந்த பணிக்கு நடுவே கிடைக்கும் இடைவெளியில் கிரிக்கெட் விளையாடி அவர் முதல்தர போட்டிகளில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக தற்போது அவர் கேகேஆர் அணிக்கு விளையாடி வருகிறார். இதற்கு முன்பு இவர் பஞ்சாப் அணிக்கு விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்