< Back
கிரிக்கெட்
டி20 உலகக் கோப்பை: இந்தியா -இங்கிலாந்து போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு?

Image Tweeted By ICC 

கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: இந்தியா -இங்கிலாந்து போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு?

தினத்தந்தி
|
9 Nov 2022 7:15 PM IST

தற்போது அடிலெய்டு நகரில் மழை பெய்து வருவதால் இந்திய ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் நாளை நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் வலுவான இங்கிலாந்தை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

தற்போது அடிலெய்டு நகரில் மழை பெய்து வருவதால் இந்திய ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் அடிலெய்டு நகரின் நாளைய வானிலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி நாளைய போட்டியில் டாஸ் நேரம் வரை மழை பெய்ய 7% மட்டுமே வாய்ப்பு உள்ளது. போட்டி தொடங்கும் போது வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாக குறையும் மற்றும் மழைக்கான வாய்ப்பு 5% ஆக குறையும்.

இந்திய நேரப்படி மதியம் 3.30 மணி அளவில் மழைக்கான வாய்ப்பு 0% ஆக குறையும். மொத்தத்தில் மழை பெய்தாலும் முதல் ஒரு மணி நேரத்தில் மட்டுமே ஆட்டத்தை தடை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, மழை பெய்ய வாய்ப்பில்லை. இதனால் ரசிகர்கள் முழு போட்டியை காண அதிக வாய்ப்புள்ளது.

ஒருவேளை போட்டி மழையால் பாதிக்கப்பட்டாலும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி இரண்டிற்கும் ரிசர்வ் நாளை ஐசிசி வைத்துள்ளது. நாளை அரையிறுதி மழையால் பாதிக்கப்பட்டால், இரண்டாம் நாள் (நவம்பர் 11) ஆட்டம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து தொடங்கும்.

மழை காரணமாக இரண்டாவது நாளிலும் ஆட்டத்தை முடிக்க முடியாவிட்டால், புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கும் அணி (லீக் சுற்றில்) இறுதிப் போட்டிக்கு வரும். அத்தகைய சூழ்நிலையில், இந்தியா பலன் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்