< Back
கிரிக்கெட்
இங்கிலாந்தின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட அதிரடி வீரர் - யார் தெரியுமா..?

Image Courtesy: AFP

கிரிக்கெட்

இங்கிலாந்தின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட அதிரடி வீரர் - யார் தெரியுமா..?

தினத்தந்தி
|
19 Aug 2024 9:49 PM IST

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.

லண்டன்,

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் 21ம் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.

இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இடம் பெறவில்லை. இங்கிலாந்தில் நடைபெற்ற தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் போது ஸ்டோக்ஸ் காயம் அடைந்ததால் அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.

அவருக்கு பதிலாக இங்கிலாந்தின் கேப்டனாக ஆலி போப் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அறிவித்துள்ளது. இந்த லெவனில் ஜேக் க்ராவ்லி காயம் காரணமாக இடம் பெறவில்லை.

அதேவேளையில் மேத்யூ பாட்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்