ஏசிசி எமர்ஜிங் பெண்கள் ஆசிய கோப்பை: இந்திய 'ஏ' அணி அறிவிப்பு...!
|ஏசிசி எமர்ஜிங் பெண்கள் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய 'ஏ' அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
புது டெல்லி,
ஏசிசி எமர்ஜிங் பெண்கள் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய 'ஏ' அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.ஏசிசி எமர்ஜிங் பெண்கள் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி குரூப் ஏ பிரிவில் ஹாங் காங் 'ஏ', தாயலாந்து 'ஏ', பாகிஸ்தான் 'ஏ' அணிகளுடன் உள்ளது.
குரூப் பி பிரிவில் வங்கதேசம் 'ஏ', இலங்கை 'ஏ', மலேசியா'ஏ', யுஏஇ 'ஏ' அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த தொடர் வரும் 12ம் தேதி தொட்டங்க உள்ளது. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 13ம் தேதி ஹாங் காங் அணியை எதிர் கொள்கிறது.
இந்த அணிக்கு ஸ்வேதா ஷெராவத் கேப்டனாகவும், சவும்யா திவாரி துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெண்கள் அணி விவரம்:-
ஸ்வேதா ஷெராவத் (கேப்டன்), சவுமியா திவாரி (துணை கேப்டன்), திரிஷா கோங்கடி, முஸ்கன் மாலிக், ஷ்ரேயங்கா பட்டீல், கனிகா அகுஜா, உமா சேத்ரி (விக்கெட் கீப்பர்), மமதா மடிவாலா (விக்கெட் கீப்பர்), டைடஸ் சாது, யாஷ்கா ஸ்ரீ எஸ், காஷ்வீ கவுதம், பர்ஷவி சோப்ரா, மன்னட் காஷ்யாப், பி அனுஷா.