< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
அபுதாபி டி10 லீக் கிரிக்கெட்; தொடக்க ஆட்டத்தில் நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் - டெக்கான் கிளாடியேட்டர்ஸ் மோதல்!
|7 Nov 2023 1:52 PM IST
அபுதாபி டி10 லீக் கிரிக்கெட் தொடர் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது.
அபுதாபி,
10 ஓவர்கள் கொண்ட போட்டியாக தொடங்கப்பட்டது அபுதாபி டி10 லீக் கிரிக்கெட் தொடர். 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த தொடரின் 7-வது சீசன் இந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 9ஆம் தேதி முடிவடைய உள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த சீசனில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் சாம்பியன் பட்டமும், நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் 2-வது இடமும் பிடித்தன.
இந்த ஆண்டு நடைபெற உள்ள சீசனின் முதல் ஆட்டத்தில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் மற்றும் நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோத உள்ளன. கடந்த சீசனின் இறுதிப்போட்டியில் விளையாடிய இரு அணிகளும் மோத உள்ளதால் தொடர் ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.