< Back
கிரிக்கெட்
இன்னும் 6 மாதங்களில் இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா தயாராகி விடுவார்: யுவராஜ் சிங்
கிரிக்கெட்

இன்னும் 6 மாதங்களில் இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா தயாராகி விடுவார்: யுவராஜ் சிங்

தினத்தந்தி
|
26 April 2024 6:47 PM IST

அபிஷேக் சர்மா 2024 ஐ.பி.எல். தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 288 ரன்கள் விளாசியுள்ளார்.

ஐதராபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 23 வயதான அபிஷேக் சர்மா 2024 ஐ.பி.எல். தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 288 ரன்கள் விளாசியுள்ளார்.

இந்த நிலையில் அபிஷேக் சர்மா குறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் கூறுகையில் ,

இன்னும் 6 மாதங்களில் அவர் இந்திய அணிக்கு தயாராகிவிடுவார். இந்திய அணியில் தேர்வு ஆவதற்கான நிலையில் உள்ளார். ஆனால், தற்போது அவர் உலகக்கோப்பைக்கு தயாராக இருப்பதாக நினைக்கவில்லை. உலகக்கோப்பையை பொருத்தவரையில் நாம் அனுபவமான வீரர்களை எடுக்க வேண்டும். உண்மையிலேயே சில வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடியுள்ளனர். வரும் 6 மாதங்கள் அபிஷேக் சர்மாவுக்கு முக்கியமானது.அவருடைய செயல்பாடு சிறப்பாக உள்ளது. அவருடைய ஸ்டிரைக் ரேட் அபாரம். ஆனால் மிகப்பெரிய ஸ்கோர் இன்னும் வரவில்லை. இதுபோன்ற ஸ்டிரைக் ரேட் இருக்கும்போது, இந்திய அணிக்கான இடத்திற்கு இடம் பிடிக்க வேண்டுமென்றால் மிகப்பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டியது அவசியம். சிறந்த ஸ்டிரைக் ரேட் இருந்தபோதிலும், நீங்கள் இந்தியாவுக்கு தகுதியானவராக சில பெரிய ஸ்கோர்கள் தேவை.இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்