< Back
கிரிக்கெட்
நன்றி சொன்ன அபிஷேக் சர்மா.... வித்தியாசமாக பதிலளித்த யுவராஜ் சிங்
கிரிக்கெட்

நன்றி சொன்ன அபிஷேக் சர்மா.... வித்தியாசமாக பதிலளித்த யுவராஜ் சிங்

தினத்தந்தி
|
6 April 2024 8:43 PM IST

தம்முடைய இந்த அதிரடியான ஆட்டத்திற்கு யுவராஜ் சிங் மற்றும் பிரையன் லாரா ஆகியோருக்கு நன்றி கூறுவதாக அபிஷேக் சர்மா தெரிவித்திருந்தார்.

ஐதராபாத்,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அபிஷேக் சர்மா ஆட்ட நாயகன் விருது வென்றார்.

மேலும் தம்முடைய இந்த அதிரடியான ஆட்டத்திற்கு ஜாம்பவான்கள் யுவராஜ் சிங் மற்றும் பிரையன் லாரா ஆகியோருக்கு நன்றி கூறுவதாகவும் அவர் போட்டியின் முடிவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அப்போட்டியில் சிறப்பாக விளையாடியும் கடைசியில் சுமாரான ஷாட்டை அடித்து அபிஷேக் சர்மா அவுட்டானதாக யுவராஜ் சிங் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அதனால் "ஒரு நபரை குச்சியுடன் அடிக்க மற்றொரு நபர் ஜாலியாக துரத்தும்" சிறிய நகைச்சுவை வீடியோவை தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ள யுவராஜ் சிங் வித்தியாசமாக அபிஷேக் ஷர்மாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது பின்வருமாறு:-

"நான் உங்கள் பின்னால் இருக்கிறேன் தம்பி. மீண்டும் நீங்கள் நன்றாக விளையாடினீர்கள். ஆனால் மோசமான ஷாட்டை அடித்து அவுட்டானீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்