< Back
கிரிக்கெட்
20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? - ஆரோன் பிஞ்ச் பதில்

கோப்புப்படம்

கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? - ஆரோன் பிஞ்ச் பதில்

தினத்தந்தி
|
8 Nov 2022 4:13 AM IST

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச் கடந்த செப்டம்பர் மாதம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

சிட்னி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச் கடந்த செப்டம்பர் மாதம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இதைத் தொடர்ந்து 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தினார்.

ஆனால் சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா சூப்பர்12 சுற்றுடன் வெளியேறியது. இதனால் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்தும் அவர் விடைபெறலாம் என்று தகவல்கள் வெளியாகின. இது குறித்து 35 வயதான பிஞ்சிடம் நேற்று நிருபர்கள் கேட்ட போது, 'நான் 20 ஓவர் கிரிக்கெட்டில் இன்னும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு நான் ஓய்வு பெறப்போவதில்லை. அது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

அடுத்து நான் பிக்பாஷ் கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறேன். அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்' என்றார். ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்கு முன்பு வரை எந்த சர்வதேச 20 ஓவர் போட்டியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்