ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி; ஆனந்த கண்ணீர் வடித்த பிரையன் லாராவை கட்டியணைத்த கில்கிறிஸ்ட் - வீடியோ
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி திரில் வெற்றி பெற்றது.
பிரிஸ்பேன்,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.
2வது போட்டியில் 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 8 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷமர் ஜோசப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்நிலையில் 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றதும் வர்ணனையில் ஈடுபட்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாரா ஆனந்த கண்ணீர் வடித்தார்.
அப்போது அவரை அருகில் இருந்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் கட்டியணைத்து வாழ்த்துகள் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.