< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
முகமது ஷமி 7 விக்கெட்டுகள் வீழ்த்துவார் என முதல் நாளே கணித்த ரசிகர் - இணையத்தில் வைரலாகும் பதிவு..!
|16 Nov 2023 9:02 PM IST
அரையிறுதி போட்டியில் முகமது ஷமி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
மும்பை,
உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை சீட்டுக் கட்டுகள் போல சரித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
முகமது ஷமியின் சிறப்பான பந்து வீச்சை பாராட்டி நெட்டிசன்கள் பலரும் பாராட்டு மழை பொழிந்தனர். இந்த நிலையில் போட்டிக்கு ஒருநாள் முன்பே ரசிகர் ஒருவர், முகமது ஷமி 7 விக்கெட்டுகள் வீழ்த்துவார் என்று கணித்து பதிவிட்ட டுவீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்தப் பதிவில் அவர், "அரையிறுதியில் முகமது ஷமி 7 விக்கெட்களை வீழ்த்தியது போல கனவு கண்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.