1020 நாட்களுக்கு பிறகு 71-வது சதம்... சதமடித்த பிறகு விராட் கோலி கூறியது என்ன
|விராட் கோலி நேற்று சர்வதேச டி20-ல் தனது முதலாவது சதத்தை அடித்ததுடன், ஒட்டுமொத்தமாக 71-வது சர்வதேச சதத்தையும் பூர்த்திசெய்தார்.
துபாய்,
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியாவும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்கள் குவித்தது.
குறிப்பாக அதிரடியாக விளையாடிய விராட் கோலி, 1020 நாட்களுக்கு பிறகு தனது 71 ஆவது சர்வதேச சதத்தை பூர்த்திசெய்தார். அதேடு டி20 போட்டிகளில் தனது முதலாவது சதத்தை நிறைவுசெய்தார்.
ஆயிரத்து 20 நாட்களுக்கு பிறகு சதமடித்துள்ள விராட் கோலி, தனது சதத்தை மனைவிக்கும், மகளுக்கும் சமர்ப்பிப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அவர், போட்டிக்கு பிறகு பேசுகையில், தனது கடினமான காலக்கட்டத்தில் தன்னுடன் நின்றவர் அனுஷ்கா சர்மா எனவும், அவருக்கும், மகள் வாமிகாவுக்கும் தனது சதத்தை சமர்ப்பிப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஓய்வு எடுத்துக்கொண்டது கிரிக்கெட்டை மீண்டும் அனுபவிக்க அனுமதித்துள்ளதாகவும் விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.