< Back
கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள்; ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள்; ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்

தினத்தந்தி
|
9 March 2024 1:51 PM IST

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார்.

தர்மசாலா,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 477 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 110 ரன்களும், ரோகித் 103 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் டாம் ஹார்ட்லி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது. இந்நிலையில், இந்த போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் 700 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். இதில் ஸ்டூவர்ட் பிராட் 604 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்து வீச்சாளர்கள் வரிசையில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, , ஆஸ்திரேலியாவில் தான் முதல்முறையாக ஆண்டர்சனை கவனித்தேன். அவர் கைகளில் பந்தை கட்டுப்படுத்தியது ஸ்பெஷலாக இருந்தது.

அப்போது நாசர் ஹுசைன் ஆண்டர்சனுக்கு அதிக ஆதரவையும் அளித்தார். இப்போது ஆண்டர்சனை பார்த்து நிச்சயம் நாசர் ஹுசைன், நான் அப்போதே சொன்னேன் என்று பெருமை கொள்வார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் என்பது மகத்தான சாதனை.

ஒரு வேகப்பந்துவீச்சாளராக 22 ஆண்டுகள் தொடர்ச்சியாக விளையாடி 700 விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பதே கற்பனையான விஷயமாக தான் இருந்தது. ஆனால் ஆண்டர்சன் செய்து காட்டிவிட்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்