< Back
கிரிக்கெட்
இன்னும் 6 விக்கெட்டுகள்... டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைக்க உள்ள ரவீந்திர ஜடேஜா

கோப்புப்படம்

கிரிக்கெட்

இன்னும் 6 விக்கெட்டுகள்... டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைக்க உள்ள ரவீந்திர ஜடேஜா

தினத்தந்தி
|
17 Sept 2024 3:42 PM IST

ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 294 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.

சென்னை,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.

இந்நிலையில், வங்காளதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது ரவீந்திர ஜடேஜா 6 விக்கெட்டுகள் கைப்பற்றினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. அதாவது, தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜா 294 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றினால் இந்திய அணிக்காக 300 டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் இடது கை சுழல் பந்துவீச்சாளர் என்ற அரிய சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளது. ஜடேஜா அந்த சாதனையை சென்னை டெஸ்ட் போட்டியிலேயே படைப்பாரா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள்:

அனில் கும்ப்ளே - 619 விக்கெட்டுகள்

ரவிச்சந்திரன் அஸ்வின் - 516 விக்கெட்டுகள்

கபில் தேவ் - 434 விக்கெட்டுகள்

ஹர்பஜன் சிங் - 417 விக்கெட்டுகள்

ஜாகீர் கான் - 311 விக்கெட்டுகள்

இஷாந்த் சர்மா - 311 விக்கெட்டுகள்

ரவீந்திர ஜடேஜா - 294 விக்கெட்டுகள்

மேலும் செய்திகள்