< Back
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு

தினத்தந்தி
|
7 March 2024 9:09 AM IST

இந்த போட்டி இந்திய வீரர் அஸ்வின் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவுக்கு 100-வது சர்வதேச டெஸ்டாக அமைய உள்ளது சிறப்பானதாகும்.

தர்மசாலா,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஐதராபாத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பின்னர் சரிவில் இருந்து மீண்டெழுந்து பதிலடி கொடுத்த இந்திய அணி விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சியில் நடந்த அடுத்த 3 டெஸ்டுகளில் வரிசையாக வெற்றி பெற்று தொடரையும் 3-1 என்ற கணக்கில் சொந்தமாக்கியது.

இதனையடுத்து இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய வீரர் அஸ்வின் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவுக்கு 100-வது சர்வதேச டெஸ்டாக அமைய உள்ளது சிறப்பானதாகும்.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா முதலில் பந்து வீச உள்ளது. இந்திய அணியில் படிக்கல் அறிமுக வீரராக இடம்பெற்றுள்ளார்.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு:-

இங்கிலாந்து: ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் போக்ஸ், டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயிப் பஷீர்.

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், படிக்கல், சர்பராஸ் கான், துருவ் ஜூரெல், ஜடேஜா, அஸ்வின், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ்.

மேலும் செய்திகள்