< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்: ரஜத் படிதார் ஏன் அணியில் இடம்பெறவில்லை? பி.சி.சி.ஐ. விளக்கம்
|7 March 2024 10:12 AM IST
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் ரஜத் படிதாருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.
தர்மசாலா,
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் ரஜத் படிதாருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் அறிமுக வீரராக இடம்பெற்றுள்ளார். இந்த தொடரில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் அவர் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.
இந்நிலையில் ரஜத் படிதார் அணியிலிருந்து காயம் காரணமாகவே நீக்கப்பட்டதாக பி.சி.சி.ஐ. விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ., தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், "நேற்றைய (மார்ச் 6) பயிற்சியின்போது இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அணியில் தேர்வு செய்யப்படவில்லை" என்று விளக்கமளித்துள்ளது.