< Back
கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்; இந்திய அணி அறிவிப்பு

image courtesy; twitter/@BCCI

கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்; இந்திய அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
29 Feb 2024 3:06 PM IST

காயத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளாத காரணத்தினால் கே.எல்.ராகுல் 5-வது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கவில்லை.

மும்பை,

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் காயத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளாத காரணத்தினால் கே.எல்.ராகுல் பங்கேற்கவில்லை. 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து விலகிய பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

வாஷிங்டன் சுந்தர் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். அவர் ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் தமிழக அணியுடன் இணைய உள்ளார்.

இந்திய அணி விவரம் பின்வருமாறு;-

ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா ( துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரெல், கே.எஸ்.பரத்,படிக்கல், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.

மேலும் செய்திகள்