< Back
கிரிக்கெட்
5வது டி20...கோலியின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் ருதுராஜ்...!
கிரிக்கெட்

5வது டி20...கோலியின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் ருதுராஜ்...!

தினத்தந்தி
|
3 Dec 2023 6:00 PM IST

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது.

பெங்களூரு,

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி டி20 போட்டியானது பெங்களூருவில் இன்று நடைபெற உள்ளது.

இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இன்று நடக்க உள்ள ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெற ஆஸ்திரேலியா கடுமையாக முயற்சிக்கும்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் விராட் கோலியின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதாவது,இன்றைய கடைசி போட்டியில் ருதுராஜ் 19 ரன்கள் அடித்தால் இரு நாடுகளுக்கு இடையிலான சர்வதேச டி20 தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை கெய்க்வாட் முறியடிப்பார்.

அந்த வகையில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒரு சர்வதேச டி20 தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையில் விராட் கோலி 231 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். கே.எல் ராகுல் 224 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள ருதுராஜ் 213 ரன்கள் அடித்துள்ளார்.

மேலும் செய்திகள்