< Back
கிரிக்கெட்
500வது சர்வதேச போட்டியில் சதம்; சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்த விராட் கோலி...!

Image Courtesy: AFP

கிரிக்கெட்

500வது சர்வதேச போட்டியில் சதம்; சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்த விராட் கோலி...!

தினத்தந்தி
|
22 July 2023 4:32 AM GMT

விராட் கோலி தனது 500வது சர்வதேச போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிராக சதம் அடித்து அசத்தினார்.

போர்ட் ஆப் ஸ்பெயின்,

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 84 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 87 ரன்களும், ஜடேஜா 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து விராட் கோலி, ஜடேஜா இருவரும் நிலைத்து நின்று விளையாடி ரன்கள் குவித்தனர். சிறப்பாக ஆடிய விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இது விராட் கோலிக்கு 500வது சர்வதேச ஆட்டம் ஆகும்.

இதன் மூலம் 500வது சர்வதேச போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சரித்திர சாதனையை விராட் கோலி படைத்தார். இறுதியில் 128 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 438 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்சில் ஆல் அவுட்டானது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்ட நேர முடிவில் 41 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. பிராத்வெய்ட் 37 ரன்களுடனும் மெக்கென்சி 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் தனது 500வது சர்வதேச போட்டியில் சதம் அடித்து அசத்தியதன் மூலம் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றை உடைத்துள்ளார். அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் 500 போட்டிகளின் முடிவில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்து அவர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

500 போட்டிகள் முடிவில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியல்:-

1. விராட் கோலி : 76

2. சச்சின் டெண்டுல்கர் : 75

3. ரிக்கி பாண்டிங் : 68

4. ஜேக் காலிஸ் : 60

மேலும் செய்திகள்