< Back
கிரிக்கெட்
இந்திய டெஸ்ட் வரலாற்றில் 4-வது முறை - சாதனை படைத்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்

image courtesy: twitter/ @BCCI

கிரிக்கெட்

இந்திய டெஸ்ட் வரலாற்றில் 4-வது முறை - சாதனை படைத்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்

தினத்தந்தி
|
9 March 2024 8:52 AM IST

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது.

தர்மசாலா,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர். இதன் மூலம் 473 ரன்கள் குவித்த இந்தியா இதுவரை இங்கிலாந்தை விட 255 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

முன்னதாக இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், சர்ப்ராஸ்கான், தேவ்தத் படிக்கல் வரிசையாக 50 ரன்களுக்கு மேல் எடுத்தனர். இந்திய டெஸ்ட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் இந்தியாவின் டாப்-5 வீரர்கள் அனைவரும் 50 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 4-வது முறையாகும்.

ஏற்கனவே 1998-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா, 1999-ம் ஆண்டில் நியூசிலாந்து, 2009-ம் ஆண்டில் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராகவும் இச்சாதனையை இந்தியா படைத்திருந்தது.

மேலும் செய்திகள்