< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்; பும்ராவுக்கு ஓய்வு...கே.எல்.ராகுல் விலகல் - பி.சி.சி.ஐ. அறிவிப்பு
|21 Feb 2024 6:53 AM IST
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது.
ராஞ்சி,
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளார். பணிச்சுமையை கருத்தில் கொண்டு இந்த டெஸ்டில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.
அவருக்கு பதிலாக முகேஷ் குமார் அல்லது ஆகாஷ் தீப் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும். காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் ராகுல் 4-வது டெஸ்டிலும் ஆடமாட்டார் என்றும், உடல்தகுதியை பொறுத்து கடைசி டெஸ்டில் அவர் பங்கேற்பது முடிவு செய்யப்படும் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்றிரவு அறிவித்தது.