4வது டி-20 போட்டி: இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை
|இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 4வது டி-20 போட்டி கராச்சியில் இன்று நடைபெறுகிறது.
கராச்சி,4 வது டி20 போட்டி, இங்கிலாந்து, பாகிஸ்தான்
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இத்தொடரில் இதுவரை 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. 3 போட்டிகளின் முடிவில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் மற்றும் 3வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும், 2வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றிருந்தன.
இந்நிலையில் தொடரின் 4வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் தொடரை வெல்வதற்கு வாய்ப்பு அதிகமாகும். அதனால் இங்கிலாந்து அணியினர் வெற்றிக்காக போராடுவர்.
அதே வேளையில் இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் பாகிஸ்தான் அணிக்கு தொடரை வெல்ல நெருக்கடி ஏற்படும் என்பதால் அந்த அணியும் வெற்றிக்காக கடுமையாக போராடுவர்.
அதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இந்த ஆட்டமும் கராச்சியில் நடைபெறுகிறது.