< Back
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தேர்வு..!

image courtesy: BCCI twitter

கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தேர்வு..!

தினத்தந்தி
|
6 Aug 2022 8:49 PM IST

இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

லாடர்ஹில்,

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில் இந்திய அணி 2 - 1 என முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 4 வது டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில் நகரில் இன்று நடக்கிறது.

இந்த போட்டியில டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

மேலும் செய்திகள்