405 பேருக்கு புதிதாக கொரோனா: தொற்றால் 4 பேர் பலி
|நேற்று காலை 8 மணி நிலவரப்படி, கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 104 ஆக குறைந்துள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் நேற்று முன்தினம் தினசரி கொரோனா பாதிப்பு 500-க்கும் கீழே (473) வந்தது. நேற்று அது மேலும் குறைந்தது. 24 மணி நேரத்தில் புதிதாக 405 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானது.
4 கோடியே 49 லட்சத்து 87 ஆயிரத்து 339 பேர் இதுவரை தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
நேற்று ஒரு நாளில் 920 பேர் தொற்றில் இருந்து மீண்டனர். மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 48 ஆயிரத்து 932 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 920 குறைந்தது. இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி, கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 104 ஆக குறைந்துள்ளது.
நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 7 பேர் பலியாகினர். நேற்று 4 பேர் பலியாகினர். இதில் கேரளாவில் விடுபட்ட கொரோனா பலிகளில் ஒன்றும் அடங்கும். இதுவரை கொரோனாவால் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 843 ஆக உயர்ந்துள்ளது.