வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து தடுமாற்றம்
|இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
பர்மிங்காம்,
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 282 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பிராத்வெய்ட் 61 ரன்களும், ஹொல்டர் 59 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கஸ் அட்கின்சன் 4 விக்கெட்டுகளும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளும், மார்க் வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜாக் கிராலி 18 ரன்களிலும், பென் டக்கெட் 3 ரன்களிலும்,மார்க் வுட் டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 3 முன்னணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஆலி போப் 6 ரன்களுடனும், ஜோ ரூட் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜெய்டன் சீல்ஸ் 2 விக்கெட்டுகளும், அல்சாரி ஜோசப் 1 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.