< Back
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் : விளையாடும் வீரர்களை  அறிவித்தது இங்கிலாந்து அணி

Image : ICC 

கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் : விளையாடும் வீரர்களை அறிவித்தது இங்கிலாந்து அணி

தினத்தந்தி
|
14 Feb 2024 2:03 PM IST

3வது டெஸ்ட் போட்டி நாளை ராஜ்கோட்டில் தொடங்குகிறது

ராஜ்கோட்,

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன. தொடர் 1-1 என சமனில் இருக்கிறது.இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நாளை ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்களை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி :

ஜாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ் , பென் போக்ஸ், ரெஹான், ஹார்ட்லி, மார்க் வுட் , ஜேம்ஸ் ஆண்டர்சன்.

மேலும் செய்திகள்