< Back
கிரிக்கெட்
3-வது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு

image courtesy: AFP

கிரிக்கெட்

3-வது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு

தினத்தந்தி
|
6 Sept 2024 3:44 PM IST

இங்கிலாந்து - இலங்கை இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

லண்டன்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மான்செஸ்டர் மற்றும் லண்டன் லார்ட்சில் நடந்த முதல் இரு டெஸ்டுகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் டி சில்வா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்க உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு:-

இலங்கை: பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்னே, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், தனஞ்சய டி சில்வா (கேப்டன்), கமிந்து மெண்டிஸ், மிலன் பிரியநாத் ரத்நாயக்க, லஹிரு குமாரா, விஷ்வ பெர்னாண்டோ, அசிதா பெர்னாண்டோ

இங்கிலாந்து: டேனியல் லாரன்ஸ், பென் டக்கெட், ஒல்லி போப்(கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஆலி ஸ்டோன், ஜோஷ் ஹல், சோயிப் பஷீர்

மேலும் செய்திகள்