இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் : டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
|டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்
ராஜ்கோட்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடந்த தொடக்க டெஸ்டில் 28 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்ப்ராஸ் கான், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ்.
இங்கிலாந்து:
ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் போக்ஸ், ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லீ, மார்க்வுட், ஆண்டர்சன்.