< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்; இந்திய முன்னணி வீரர் பங்கேற்பது சந்தேகம்...?
|9 Feb 2024 2:31 PM IST
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி தொடங்குகிறது.
புதுடெல்லி,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகிறது.
ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு மற்றும் இடுப்பு பகுதிகளில் வலி உள்ளதாக அணி நிர்வாகத்திடன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அவர் 3ம் டெஸ்ட் போட்டி மட்டுமின்றி எஞ்சிய தொடரில் இருந்தும் விலக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.