< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
3வது டி20 : தொடரை வெல்வது யார் ? - இந்தியா - இலங்கை அணிகள் நாளை மோதல்
|6 Jan 2023 10:23 PM IST
3வது டி20 ராஜ்கோட் -ல் நாளை நடைபெற உள்ளது
ராஜ்கோட்,
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தொடரை வெல்ல போவது யார் என்பதை நிர்ணயிக்கும் 3வது டி20 ராஜ்கோட்-ல் நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இரு அணிகளும் போராடும்.