3வது டி20 போட்டி; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்
|டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் முழுமையாக கைப்பற்றியது.
டிரினிடாட்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடியது. இதில் முதல் இரு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டி மழை காரணமாக 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா 13 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 108 ரன்கள் எடுத்தது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஸ்டப்ஸ் 40 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 109 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 9.2 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 116 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஷாப் ஹோப் 42 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் முழுமையாக கைப்பற்றியது.