< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
கடைசி டி20 போட்டி; இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்
|21 Feb 2024 2:57 PM IST
இன்று இரவு 7.00 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
தம்புள்ளா,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் இலங்கை அணி கைப்பற்றியது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி தம்புள்ளாவில் இன்று நடைபெற உள்ளது. இன்று இரவு 7.00 மணிக்கு போட்டி தொடங்குகிறது.