3வது டி20 போட்டி; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து...!
|இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.
டுனெடின்,
ஷகீன் ஷா அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு டி20 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி பின் ஆலெனின் அதிரடி சதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி ஆடியது. அந்த அணியில் சயூம் அயூப் 10 ரன், ரிஸ்வான் 24 ரன், பாபர் ஆசம் 58 ரன், பக்கார் ஜமான் 19 ரன், அசாம் கான் 10 ரன், இப்டிகார் அகமது 1 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 45 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என முன்னிலை பெற்றதோடு தொடரையும் கைப்பற்றி அசத்தியது . இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.