3-வது டி20 போட்டி; 25 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை
|2-வது போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற உள்ளது.
கவுகாத்தி,
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனை தொடர்ந்து, 2-வது போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற உள்ளது. 3-வது போட்டி கவுகாத்தி நகரில் வருகிற 28-ந்தேதி நடைபெற இருக்கிறது.
இதுபற்றி பி.சி.சி.ஐ. அமைப்பின் இணை செயலாளர் தேவஜித் லோன் சாய்கியா கூறும்போது, ரசிகர்களிடம் இருந்து அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மொத்தமுள்ள 37 ஆயிரம் டிக்கெட்டுகளில் இதுவரை 25 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.
முழு அளவில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று விடும் என்ற நம்பிக்கை உள்ளது. உணவு, வாகன நிறுத்தம், கழிவறை உள்ளிட்ட தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து விட்டோம். ஒவ்வொரு விசயமும் நன்றாக கவனத்தில் கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.