3வது டி20 : வங்காளதேச அணியை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்
|வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என டி 20 தொடரைக் கைப்பற்றியது.
கயானா:
வங்காளதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-0 என கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி கயானாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. அபிப் ஹுசைன் அரை சதமடித்தார். லிட்டன் தாஸ் 49 ரன்னில் அவுட்டானார்.
இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 18.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அந்த அணியில் நிகோலஸ் பூரன் 39 பந்துகளில் 5 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 74 ரன்கள்,தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் 55 ரன்கள் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என டி 20 தொடரைக் கைப்பற்றியது.