3வது டி20 போட்டி : டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
|டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பாசட்டரே,
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 3வது டி 20 போட்டி இன்று நடக்கிறது,
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.நேற்று ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணியும் ,வெற்றியை தொடர வெஸ்ட் இண்டீஸ் அணியும் முனைப்பு காட்டும் இதனால் .இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது