< Back
கிரிக்கெட்
3வது டி20; இப்ராகிம் சத்ரான் அதிரடி - அயர்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்

Image Courtesy: @ACBofficials

கிரிக்கெட்

3வது டி20; இப்ராகிம் சத்ரான் அதிரடி - அயர்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்

தினத்தந்தி
|
19 March 2024 8:18 AM IST

ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிரடியாக ஆடிய இப்ராகிம் சத்ரான் 72 ரன்கள் அடித்தார்.

ஷார்ஜா,

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து வெற்றிபெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற புள்ளி கணக்கில் ஆப்கானிஸ்தான் வென்றது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிரடியாக ஆடிய இப்ராகிம் சத்ரான் 72 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களம் இறங்கியது.

அயர்லாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பால்பிர்னி 9 ரன், ஸ்டிர்லிங் 4 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய வீரர்கள் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இறுதியில் அயர்லாந்து அணி 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 98 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அயர்லாந்து தரப்பில் ஓமர்சாய் 4 விக்கெட், நவீன் உல் ஹக் 3 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் 57 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அயர்லாந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மேலும் செய்திகள்