இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: வங்காளதேச அணியிலிருந்து முக்கிய வீரர் நீக்கம்
|வங்காளதேசம் -இலங்கை இடையிலான 3-வது ஒருநாள் போட்டி வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது.
டாக்கா,
வங்காளதேசம் -இலங்கை இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான வங்காளதேச அணியிலிருந்து அந்த அணியின் முக்கிய வீரரான லிட்டன் தாஸ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அறிமுக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜாக்கர் அலி அனிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான வங்காளதேச அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), அனாமுல் ஹக் பிஜோய், சவுமியா சர்க்கார், தன்சித் ஹசன் தமீம், முஷ்பிகுர் ரஹீம், தவ்ஹித் ஹிரிடோய், மஹ்மூத் உல்லா, மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஜாக்கர் அலி அனிக்.