< Back
கிரிக்கெட்
3-வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

Image Courtesy: ICC Twitter 

கிரிக்கெட்

3-வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

தினத்தந்தி
|
11 Sept 2022 9:42 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

கெய்ர்ன்ஸ்,

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அத்தொடரின் முதல் 2 ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில், தொடரின் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. ஏற்கனவே தொடரை இழந்த நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெறும் நோக்குடன் களம் இறங்குகிறது. இந்நிலையில், இந்தப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.

மேலும் செய்திகள்