< Back
கிரிக்கெட்
3வது ஒருநாள் போட்டி; வெறும் 86 ரன் - வெஸ்ட் இண்டீசை சுருட்டி அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா

Image Courtesy: AFP

கிரிக்கெட்

3வது ஒருநாள் போட்டி; வெறும் 86 ரன் - வெஸ்ட் இண்டீசை சுருட்டி அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா

தினத்தந்தி
|
6 Feb 2024 2:21 PM IST

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

கான்பெர்ரா,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் 2 போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா இரண்டிலும் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி கான்பெராவில் இன்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வெறும் 24.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ரன்கள் மட்டுமே எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக அலிக் அத்தானாஸ் 32 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் சேவியர் பார்ட்லெட் 4 விக்கெட்டும், லேன்ஸ் மோரிஸ், ஆடம் ஜாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 87 ரன் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா 6.5 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 87 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 9ம் தேதி தொடங்குகிறது.

மேலும் செய்திகள்